சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி: ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி: ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

சென்னை: யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் ‘குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி, 2026–27 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் முதற்கட்டத் தேர்வு (Prelims) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Mains) ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் திறமையான தேர்வர்களுக்கு தரமான பயிற்சி வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தேர்வர்களுக்கு பாடவாரியான வகுப்புகள், தரமான படிப்புப் பொருட்கள், தேர்வு தொடர்கள் (Test Series), தனிப்பட்ட வழிகாட்டுதல், சந்தேக நிவர்த்தி அமர்வுகள் மற்றும் நேர்காணல் பயிற்சி உள்ளிட்டவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் ஜூன் 14-ல் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://forms.gle/KQFZodeiJ9kKuhPm9 என்ற இணைய இணைப்பைப் பயன்படுத்தியோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93639 23451 / 95004 81074 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி: ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தவெக அரசு நடவடிக்கை எடுக்காது என குற்றவாளிகள் துணிச்சலில் உள்ளார்களா? - கனிமொழி கேள்வி
சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி: ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தேர்தல் வாக்குறுதிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in