டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு மற்​றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு​வல​கம் மூலம் நடத்​தப்​படும் டிஎன்பி எஸ்சி குரூப் 2, 2ஏ போட்​டித் தேர்​வு​களுக்​கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்​க​வுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) மூலம் நடத்​தப்​படும் குரூப் 2, 2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இத்​தேர்​வுக்கு பட்​டப்​படிப்பு படித்​தவர்​கள் செப். 9-ம் தேதி வரை இணையவழி​யில் விண்​ணப்​பிக்​கலாம்.

வயது வரம்​பு, தேர்வு நடை​முறை, பாடத் ​திட்​டம் உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​கள் https://tnpsc.gov.in என்ற இணை​யதளத்​தில் உள்​ளன.

இந்த தேர்​வுக்கு தயா​ராகும் மாணவர்​களுக்​காக சென்னை கிண்​டி​யில் உள்ள மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தில் இயங்​கும் தன்​னார்வ பயிலும் வட்​டத்​தில் கட்​ட​ணமில்லா இலவச பயிற்சி வகுப்​பு​கள் செப்​.3-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்​கு​கின்​றன.

வாரந்​தோறும் மாதிரி தேர்​வு​களும் மாநில அளவி​லான முழு மாதிரி தேர்​வு​களும் நடத்​தப்​படும். பயிற்சி வகுப்​பில் சேர விருப்​ப​ முள்​ளவர்​கள் https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 என்ற கூகுள் படிவத்​தில் தங்​களது விவரங்களை நிரப்​பி, தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்​றும் பாஸ்​போர்ட் அளவுள்ள புகைப்​படத்​துடன் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில் நெறி வழி​காட்​டும் மையத்தை நேரில் அணுகி சேர்ந்து கொள்​ளலாம்.

கூடு​தல் விவரங்​களுக்கு decgcguindy@gmail.com என்​ற மின்​னஞ்​சல்​ ​வாயி​லாக தொடர்​பு கொள்​ளலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in