அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 5 புதிய டிப்​ளமா படிப்​பு​கள் விரை​வில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளன. தமிழகத்​தில் 55 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களும், 32 அரசு உதவி​பெறும் பாலிடெக்​னிக்​கு​களும், 400-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் உள்​ளன.

இவற்​றில் 25 வித​மான டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் கல்வி பயின்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தற்​போதைய வேலை​வாய்ப்​புச் சூழலை கருத்​தில் கொண்டு அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் பேக்​கேஜிங் டெக்​னாலஜி, பெட்​ரோகெமிக்​கல் இன்​ஜினியரிங், ஃபுட்​வேர் டெக்​னாலஜி, லெதர் மற்​றும் ஃபேஷன் டெக்​னாலஜி, ஃபேஷன் மற்​றும் குளோத்​திங் டெக்​னாலஜி ஆகிய 5 புதிய டிப்​ளமா படிப்​பு​களை அறி​முகப்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​துள்​ளது.

அவற்​றுக்​கான வரைவு பாடத்​திட்​டம் தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் இணை​ய தளத்​தில் (https://dte.tn.gov.in/) வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. இது தொடர்​பான கருத்​துகளை curriculumspecial2023@gmail.com என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி வரை அனுப்​பலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் கூறியுள்​ளார்​.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in