தமிழகத்தில் அரசு - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு ரூ.20,000 முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம்

தமிழகத்தில் அரசு - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு ரூ.20,000 முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்றும் தனி​யார் மருத்​துவக் கல்​லூரிகளில் முது​நிலை படிப்​பு​களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்​சம் வரை கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் எம்​.டி, எம்​.எஸ் உள்​ளிட்ட முது​நிலை மருத்துவ படிப்​பு​கள், பட்​டயப்​படிப்​பு​களுக்கான கல்விக் கட்​ட​ணத்தை மருத்து​வக் கல்வி இயக்​ககம் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, நடப்​பாண்​டில் அரசு மருத்​து​வக் கல்லூரி​களி​ல் முது​நிலை மருத்​துவ படிப்​பு​களுக்கு ஆண்​டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்​ட​ண​மாக​வும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்​ட​ண​மாக​வும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளன.

முது​நிலை பட்​டயப்​படிப்​பு​களுக்கு ரூ.20 ஆயிர​மாக உள்​ளது. மாணவர்​களுக்​கான ஊக்​கத்​தொகை மாதம் ரூ.54,025 வீதம் முதல் ஆண்​டிலும், ரூ.55,149 இரண்​டாம் ஆண்​டிலும், ரூ.56,275 மூன்​றாம் ஆண்​டிலும் வழங்​கப்படவுள்​ளது. முது​நிலை பட்​டயப்​படிப்பு ஊக்​கத்தொகை முதல் ஆண்​டில் மாதம் ரூ.50,673, 2-ம் ஆண்​டில் ரூ.53,461 நிர்​ணயிக்கப்​பட் டுள்ளது.

அதே​போல், 21 தனியார் மருத்​துவக் கல்​லூரி​களுக்கான கல்வி கட்​ட​ண​மும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில், நோயாளி​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தில் நேரடி தொடர்​பில்​லாத பாடங்​கள் (நான் கிளினிக்​கல்) மற்​றும் பட்​டயப்​படிப்​பு​களில் உள்ள அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு ரூ.3 லட்​ச​மும், நிர்​வாக இடங்​க ளுக்கு ரூ.5 லட்​ச​மும், வெளி​நாடுவாழ் இந்​தி​யர் இடங்​களுக்கு ரூ.19 லட்​ச​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

கிளினிக்​கல் படிப்​பு​களுக்கு முறையே ரூ.3.5 லட்​சம், ரூ.16 லட்​சம் மற்​றும் ரூ.29 லட்​சம் என நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், மேம்​பாட்டு நிதி​யாக அதி​கபட்​சம் ரூ.60 ஆயிரம் வரை தனி​யார் கல்வி நிறு​வனங்​கள் வசூலித்​துக் கொள்​ளலாம் என்று மருத்​து​வக் கல்வி இயக்​ககம்​ தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்தில் அரசு - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு ரூ.20,000 முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன.6 முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in