பொறியியல் துணை கலந்தாய்வு தொடங்கியது

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது.

சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 3 சுற்று கலந்தாய்வும் முடிவடைந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரம்பின. 56 ஆயிரத்து 530 இடங்கள் காலியாகவுள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான இணையவழி துணைக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 18,548 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்கள் விருப்பமான கல்லூரிகளை தேர்வுசெய்ய சனிக்கிழமை (இன்று) மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு 7-ம் தேதி காலை தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in