பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இதில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை. துறைசார் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர 2.23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். முதல்கட்டமாக அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து அவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் விஸ்வநாதன் வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in