

சென்னை: மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா,முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
பள்ளி,கல்லூரி கல்வியைத் தொடர முடியாதவர்கள், பணிபுரியும் நபர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உயர்கல்வியை நெகிழ்வு முறையில் தொடர விரும்புவோர் அனைவருக்கும் தொலைதூரக் கல்வி படிப்புகள் வரப்பிரசாதமாக அமைகின்றன.
இந்நிலையில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.