மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன். உடன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் இளங்கோவன், கார்த்திகேயன்.

கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன். உடன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் இளங்கோவன், கார்த்திகேயன்.

Updated on
1 min read

திருப்புவனம்: ​மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்லை என பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் நடை​பெறும் 11-ம் கட்ட அகழாய்​வுப் பணி​யை​யும், திறந்​தவெளி அகழ் வைப்​பகத்​தை​யும் பார்​வை​யிட்ட பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: முந்​தைய ஆட்​சிகளில் தொடங்​கப்​பட்ட அனைத்து நல்லதிட்​டங்​களை​யும் தவெக அரசு நிறுத்​தாது. அதில் இருக்​கும் குறை​கள் சரி செய்யப்பட்டு மேம்​படுத்​தப்​படும்.

பழி​வாங்​கும் அரசி​யல் எங்​களிடம் இல்​லை. கீழடி மட்​டுமின்றி அகரம், கொந்​தகை உள்​ளிட்ட இடங்​களி​லும் அகழாய்​வு​கள் நடை​பெறுகின்​றன. மேலும், தேவை​யான அறி​வியல் சான்​றுகளைத் தாக்​கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளைவெளி​யிட, இந்​திய தொல்​லியல் துறை​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

கட்டண விவரங்​களை வெளி​யி​டாதது குறித்து புகார் வந்த பள்​ளி​களுக்கு மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். தனி​யார் பள்​ளி​கள் அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்தை மட்​டுமே வசூலித்து விதி​களை பின்​பற்ற வேண்​டும். மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்​லை. வீடு, வீடாகச் சென்று அறி​வுறுத்தி மாணவர் சேர்க்கை அதி​கரிக்​கப்​படும். தமிழகத்​தில் காம​ராஜர் ஆட்​சி​தான் தொடர்​கிறது. அரசுப் பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் விரிவுப்​படுத்​தப்​படும்.

மத்​திய வெளி​யுறவுத் துறை​யிடம் சட்​டப்​பூர்வ அனு​மதி பெற்​றுத்​தான் வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டோம். இதில் எந்த சட்​ட​விரோத​மும் இல்​லை. கட்​சி​யில் இணை​யும் அனை​வரை​யும் அரவணைத்​துச் செல்​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சமணர் கல்வெட்டுகள்: இதனிடையே, மதுரை மாவட்​டம் மாங்​குளம் அரு​கே​யுள்ளமீனாட்​சிபுரம் மலை​யில் கிமு 3-ம் நூற்​றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்​கை, தமிழ் பிராமி எழுத்​துகள் பொறித்த கல்​வெட்​டு​களை அமைச்​சர் பார்​வை​யிட்​டார். கல்​வெட்​டு​களின் கால​கட்​டம், வரலாற்று முக்​கி​யத்​து​வம், பாது​காப்பு நடவடிக்கை குறித்து அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார்.

பின்​னர், அமைச்​சர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ் மொழி, கலை, இலக்​கி​யம், பண்​பாடு விழு​மி​யங்​கள், பொக்​கிஷங்​களை தமிழ்​நாடு முழு​வதும் மேம்​படுத்த ஆய்வு செய்​கிறோம். இதுபற்றி முதல்வரிடம் அறிக்​கை​ சமர்ப்​பிக்​கப்​படும். இதன்​மூலம் தொல்​லியல் பொக்​கிஷங்​களை பாது​காத்து மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​படும்.

கீழடி தமிழர்​களுக்கு மட்​டுமின்றி உலக நாகரி​கத்​துக்​கும் பெரிய தாய்​மடி​யாகும். பத்​திரி​கை​யாளர்​கள் நலம் சார்ந்த திட்​டங்​கள் தனிமனித தலை​யீடு இன்றி நிறைவேற்​றப்​படும். பள்ளி மாணவ, மாணவி​களுக்​கான சீருடை மாற்​றம் குறித்த அறிக்கை முதல்​வரிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதுகுறித்து விரை​வில் முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன். உடன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் இளங்கோவன், கார்த்திகேயன்.  </p></div>
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in