பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை விரைவாக வழங்க ஏற்பாடு

பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை விரைவாக வழங்க ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: இந்த ஆண்டு பொறி​யியல் டிப்​ளமா முடித்த மாணவர்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​கள் விரை​வாக கிடைக்க தொழில்​நுட்​பக்​கல்​வித்​துறை ஏற்​பாடு செய்​துள்ளது. மாணவர்​களுக்​கான சான்​றிதழ்​கள் அந்​தந்த பாலிடெக்​னிக் கல்​லூரி​களுக்கு இன்று முதல் விநி​யோகிக்​கப்பட உள்​ளன.

இதுதொடர்​பாக, தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர்​கள் (தேர்​வு​கள்) கோ.கோபு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் தனி​யார் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: கடந்த ஏப்​ரல் மாதம் (ஆர் 2023 பாடத் திட்​டம்) நடை​பெற்ற பட்டய (டிப்​ளமோ) தேர்​வு​களில் இறுதி பருவ தேர்​வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்​களின் உயர்​கல்வி மற்​றும் வேலை​வாய்ப்பு நலன் கருதி அவர்​களுக்கு சான்​றிதழ்​களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, பாலிடெக்​னிக் கல்​லூரி​களுக்கு மாணவர்​களின் தேர்ச்சி சான்​றிதழ்​கள் இன்று (3-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரை விநி​யோகிக்​கப்​படும். அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் 3-ம் தேதி​யும், அரசு நிதி​யுதவி பெறும் கல்​லூரி​கள் 4-ம் தேதி​யும், தனி​யார் சுயநிதி கல்​லூரி​கள் 5, 6, 7-ம் தேதி​களி​லும் தங்​கள் பிர​தி​நி​தி​களை அனுப்பி தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தில் சான்​றிதழ்​களை பெற்​றுக் கொள்​ளலாம். அவ்​வாறு பெற்​றுக் கொண்ட சான்​றிதழ்​களை மாணவர்​களுக்கு விரை​வாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு கல்​லூரி​களின் முதல்​வர்​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​து உள்ளார்.

பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை விரைவாக வழங்க ஏற்பாடு
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in