சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேறியவர்களுக்கு கல்வெட்டு, தொல்லியல் டிப்ளமா படிப்பு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேறியவர்களுக்கு கல்வெட்டு, தொல்லியல் டிப்ளமா படிப்பு
Updated on
1 min read

சென்னை: கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு தொடர்​பான ஓராண்டு கால டிப்ளமா படிப்​புக்​கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம் என உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை தரமணி​யில் உள்ள உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு தொடர்​பான ஓராண்டு கால டிப்ளமா படிப்பை வழங்கி வரு​கிறது. 10-ம் வகுப்பு முடித்​தவர்​கள் இதில் சேரலாம். வயது வரம்பு கிடை​யாது.

இந்த படிப்​பில் கல்​வெட்டு படி​யெடுத்​தல், ஆவணப்​படுத்​துதல் குறித்த பயிற்​சி​யும் அளிக்​கப்​படும். இதன்​மூலம் தமிழக வரலாறு, மொழி, பண்​பாடு, கலை, இலக்​கி​யம் குறித்து அறிந்து கொள்​ளலாம்.

இந்த டிப்ளமா படிப்​பில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பத்தை உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தில் (www.ulakaththamizh.in) பதி​விறக்​கம் செய்​ய​லாம். விண்​ணப்​பக் கட்​ட​ணம், சேர்க்கை கட்​ட​ணம், அடை​யாள அட்​டை, தேர்​வுக் கட்​ட​ணம் என மொத்​தம் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்​டும்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்​துடன் கட்​ட​ணத்​துக்​கான கேட்​புக் காசோலையை (டி​மாண்ட் டிராஃப்ட்) இணைத்​து, ‘இயக்​குநர், உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம், 2-ம் முதன்​மைச் சாலை, மைய தொழில்​நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்​னை-600113’ என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். கட்​ட​ணத்தை ரொக்​க​மாக செலுத்தி விண்​ணப்​பத்தை நேரிலும் சமர்ப்​பிக்​கலாம்.

வார விடு​முறை நாளான ஞாயிறு​தோறும் முழுநேர​ வகுப்​பு​கள் நடை​பெறும். வகுப்பு தொடங்​கும் நாள் பின்​னர் தெரிவிக்​கப்​படும். மேலும் விவரம் அறிய 9500012272 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேறியவர்களுக்கு கல்வெட்டு, தொல்லியல் டிப்ளமா படிப்பு
தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஊழல் செய்யவே மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in