எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கல்லூரியை தேர்வு செய்ய ஆக.24 வரை அவகாசம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கல்லூரியை தேர்வு செய்ய ஆக.24 வரை அவகாசம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 7,157 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,383 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன.

நிர்​வாக ஒதுக்​கீட்​டில் 1,996 எம்​பிபிஎஸ் இடங்​கள், 580 பிடிஎஸ் இடங்​கள் இருக்​கின்​றன. இந்த இடங்​களுக்கு மொத்​தம் 72,633 பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர். பரிசீலனைக்கு பிறகு, தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, முதல்​சுற்று கலந்​தாய்வு கடந்த 13-ம்

தேதி தொடங்​கியது. சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நடந்​தது.

அன்​றைய தினமே பொதுப் பிரிவு மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு www.tnmedicalselection.org என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் தொடங்​கியது. ஆக. 19 வரை கல்​லூரி​களை தேர்வு செய்​ய​லாம் என்று அறிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் மாணவர்​களின் கோரிக்​கையை ஏற்​று, அவகாசம் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இரண்​டாவது முறை​யாக வரும் 24-ம் தேதி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. பரிசீலனைக்குப் பிறகு இடஒதுக்​கீடு செய்​யப்​பட்​டதற்​கான முடிவு​கள் வரும் 27-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கல்லூரியை தேர்வு செய்ய ஆக.24 வரை அவகாசம்
சிங்கப்பூரில் அனைத்துலக தமிழ் நாடக திருவிழா: ஆக.28-ல் ‘காற்றினிலே வரும் கீதம்’ - சிறப்புக் காட்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in