சிங்கப்பூரில் அனைத்துலக தமிழ் நாடக திருவிழா: ஆக.28-ல் ‘காற்றினிலே வரும் கீதம்’ - சிறப்புக் காட்சி

காற்றினிலே வரும் கீதம் நாடகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக லாவண்யா வேணுகோபால், கல்கி டி.சதாசிவமாக  எம்.வி.பாஸ்கர், மகா பெரியவராக தம்பி பார்த்தசாரதி.

காற்றினிலே வரும் கீதம் நாடகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக லாவண்யா வேணுகோபால், கல்கி டி.சதாசிவமாக  எம்.வி.பாஸ்கர், மகா பெரியவராக தம்பி பார்த்தசாரதி.

Updated on
1 min read

சென்னை: சிங்கப்பூரில் முதன்​முறை​யாக நடத்​தப்​படும் அனைத்​துல​கத் தமிழ் நாடகத் திரு​விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது.

அகம் நாடகக் குழு, பர்ப்​பிள் ஆரா ப்ரொடக் ஷன்​ஸ், ஆர்டி காம்​பஸ் ஆகிய கலை, நிகழ்ச்சி மேலாண்மை நிறு​வனங்​கள் இணைந்து சிங்​கப்​பூரில் நடத்​தும் அனைத்​துல​கத் தமிழ் நாடகத் திரு​விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது.

ஆக.30-ம் தேதி வரை நடை​பெறும் இவ்​விழா​வில் மொத்​தம் 8 மேடை நாடகங்​கள், 6 பயிலரங்​கு​கள், ஒரு கருத்​தரங்கு ஆகியன இடம் பெற்​றுள்​ளன.

‘நாடகமிக்’ என்று தலைப்​பில் நடத்​தப்​படும் இவ்​விழா​வில் அகம், பிளாக்​ஸ்​பைஸ், டிரை​யாங்​கிள், ஏகேடி, அதிபதி ஆகிய 5 உள்​ளூர்த் தமிழ் நாடகக் குழுக்​கள் கைகோத்​துள்​ளன.

நியூசிலாந்​தின் ‘இந்​தி​யன் இன்க்​ஸ், இங்​கிலாந்​தின் ரசா, சென்​னை​யின் டம்​மீஸ் டிரா​மா, லிட்​டில் தியேட்​டர், த்ரீ என்​டர்​டெய்ன்ஸ் குழுக்​களும் இவ்​விழா​வில் இணை​கின்​றன.

விழா குறித்து ‘அகம்’ நாடகக் குழு​வின் தலை​வர் கணேஷ் சுப்​பிரமணி​யன் கூறும்​போது, “அகம் நாடகக் குழு​வின், ‘கை வரிசை’, டிரை​யாங்​கிள் குழு​வின், ‘ஒரு முடிவு, ஓர் உலகம்’, பிளாக்​ஸ்​பைஸ் குழு​வின் ‘பல்​லி’ ஆகியன இடம்​பெறுகின்​றன.

லாவண்யா, கணேஷ்

லாவண்யா, கணேஷ்

டம்​மீஸ் நாடகக் குழு​வின் ‘வீழ்​வேன் என்று நினைத்​தாயோ?’, லிட்​டில் தியேட்​டரின் ‘தி குக்ஸ் - சன்னி சைட் அப்’, த்ரீ என்​டர்​டெய்ன்​ஸின் ‘காற்​றினிலே வரும் கீதம்’ ஆகிய நாடகங்​களும் மேடை ஏறுகின்​றன. ‘சாத்​தி​யங்​கள்’ என்ற கருப்​பொருளு​டன் இவ்​விழா வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

த்ரீ என்​டர்​டென்ஸ் குழு​வைச் சேர்ந்த லாவண்யாகூறும்போது, “ஆக.28-ம் தேதி இரவு 7.30 மணிக்கு பாரத ரத்னா எம்​.எஸ்​. சுப்​புலட்​சுமி​யின் வாழ்க்கை வரலாற்​றை, ‘காற்​றினிலே வரும் கீதம்’ என்ற தலைப்​பில் நாடக​மாக இயக்கி மேடை ஏற்​று​வதை பெரும் பாக்​கிய​மாகக் கருதுகிறேன்.

எழுத்​தாளர் வி.எஸ்​.​வி. ரமணனின் கதையை அடிப்​படை​யாகக் கொண்ட இந்த நாடகத்​துக்கு சி.​வி.சந்​திரமோகன் வசனம் எழு​தி​யுள்​ளார். இசை - தக் ஷின். பாடல்​களை காயத்ரி வெங்​கட்​ராகவன் பாடி​யுள்​ளார். என்​னுடன் இணைந்து எம்​.​வி.​பாஸ்​கர் நாடக​மாக்​கம் செய்​துள்​ளார்” என்​றார்.

கூடு​தல்​ தகவல்​களை https://www.nadagamic.com என்​ற இணை​ய​முகவரி மூலம்​ அறியலாம்​.

காற்றினிலே வரும் கீதம் நாடகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக லாவண்யா வேணுகோபால், கல்கி டி.சதாசிவமாக  எம்.வி.பாஸ்கர், மகா பெரியவராக தம்பி பார்த்தசாரதி.

மின்வாரியத்துக்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in