மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: ​இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோபதி துறை​யின்​கீழ் அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வ​மனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி, திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை திரு​மங்​கலத்​தில் ஓமியோபதி மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​வில் அருகே கோட்​டாறில் ஆயுர்​வேத மருத்​து​வக் கல்​லூரி உள்​ளன. அதே​போல், 29 தனி​யார் கல்​லூரி​கள் இருக்​கின்​றன.

இந்​நிலை​யில் சித்​தா, ஆயுர்​வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) பட்​டப்​ படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் தொடங்​கியது.

நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும் இந்த 4 படிப்​பு​களுக்​கும் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு வழங்​கப்​படு​கிறது. இது​வரை 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​னப்​பித்​துள்​ளனர்.

அதே​போல், சென்னை அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வ​மனை வளாகம் மற்​றும் செங்​கல்​பட்​டில் அரசு யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வக் கல்​லூரி​யும், 17 தனி​யார் கல்​லூரி​களும் உள்​ளன.

இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​துவ பட்​டப்​படிப்​புக்கு (பிஎன்​ஒய்​எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.

பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும், இந்த படிப்​புக்கு இது​வரை 2,500-க்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இந்த படிப்​புக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத உள்​ஒதுக்​கீடு இல்​லை.

இந்த 5 ஆயுஷ் படிப்​பு​களுக்​கும் ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​பது நேற்று மாலை 5 மணி​யுடன் நிறைவடைந்த நிலை​யில், மாணவ, மாணவி​களின் கோரிக்​கையை ஏற்று ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​பது ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணி நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, சிறப்பு பிரி​வில் (மாற்​றுத்​திற​னாளி​கள், முன்​னாள் ராணுவ வீரர் வாரிசு, விளை​யாட்டு வீரர்) விண்​ணப்​பிப்​பவர்​கள் மட்​டும் ஆன்​லைனில் விண்​ணப்​பித்த விண்​ணப்​பத்தை பதி​விறக்​கம் செய்​து, கேட்​கப்​பட்​டுள்ள அனைத்து சான்​றிதழ்​களி​லும் சுய சான்​றொப்​பமிட்ட நகல்​களை இணைத்து ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்​குள் செய​லா​ளர், தேர்​வுக்​குழு, இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோபதி துறை இயக்​ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்​திய மருத்​து​வ​மனை வளாகம், அரும்​பாக்​கம், சென்னை-106 என்ற முகவரி​யில் நேரிலோ தபால்​ மூல​மாகவோ சமர்ப்​பிக்​க வேண்​டும்​.

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
உத்திரமேரூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஓர் இயந்திரம் பழுது: நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in