மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Published on

சென்னை: மத்​திய பல்​கலை.களில் இளநிலைப் படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் தேர்​வெழுத மாணவர்​கள் வரும் 30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டுமென என்​டிஏ அழைப்பு விடுத்​துள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலைப் பட்​டப் படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத்​தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அதன்​படி, அடுத்த கல்​வி​யாண்​டில் (2025-26) இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 11 முதல் 31-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.

விருப்​ப​முள்​ளவர்​கள் https://cuet.nta.nic.in/ என்ற இணை​யதளம் மூலம் வரும் 30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பக் கட்​ட​ணம் செலுத்த வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். விண்​ணப்​பங்​களில் பிப்​ர​வரி 2, 3, 4-ம் தேதி​களில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளலாம்.

இதில் ஏதேனும் சிரமங்​கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது cuet-ug@nta.ac.in என்ற மின்​னஞ்​சல் வழி​யாக தொடர்பு கொள்​ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்​தப்பட உள்​ளது.

மேலும், ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உட்பட கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற வலைத்​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பென்னிகுயிக்குக்கு செலுத்தும் நன்றிக்கடனாக கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை பொங்கல் திருநாளில் ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in