விளையாட்டும் பொழுதுபோக்கும் சேர்ந்ததே கல்வி: சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆட்சியர் எம்.பிரதாப் வலியுறுத்தல்

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’
விளையாட்டும் பொழுதுபோக்கும் சேர்ந்ததே கல்வி: சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆட்சியர் எம்.பிரதாப் வலியுறுத்தல்
Updated on
3 min read

திருவள்ளூர்: அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ எனும் பள்ளி மாணவ-மாணவி களுக்கான சதுரங்கப் போட்டி, திரு வள்ளூர் மாவட்டம் வெங்கலில் உள்ள அம்ரிதா விஷ்வ வித்யா பீடத்தின் சென்னை வளாக அரங்கில் நடைபெற்றது.

பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள சதுரங்க விளையாட்டுத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை வேலம்மாள் நெக்சஸ் இணைந்து நடத்தியது.

தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன், காபா செஸ் அகாடமி மற்றும் ஆஷ் செஸ் ஹப் ஆகியவற்றின் உறுதுணையோடு இந்தப்போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘தி இந்து’வுடன் (ஆங்கிலம்) நமக்கு எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும். ஏனென்றால், போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் ‘இந்து’வுடன் தான் தங்கள் படிப்பைத் தொடங்குவர்.

‘தி இந்து’ என்ற நாளிதழுக்கு நூற்றாண்டையும் கடந்து மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. ‘தி இந்து’வின் ஆசிரியர் குழு உரையைப் படிக்காமல் யாராலும் போட்டித் தேர்வை எழுத முடியாது.

‘தி இந்து’வின் தமிழ் பதிப்பான ‘இந்து தமிழ் திசை’, பல ஆண்டுகளாக தலையங்கங்கள், செய்திகளை சிறப்பாக வெளியிட்டு வருகிறது. அந்த `இந்து தமிழ் திசை' நாளிதழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டியை நடத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கலில் உள்ள அம்ரிதா விஷ்வ வித்யா பீடத்தின் சென்னை வளாக அரங்கில் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ செஸ் போட்டியைத் தொடங்கி வைத்து பேசும் மாவட்ட ஆட்சியர் பிரதாப். உடன், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாக இயக்குநர் ஐ.பி.மணிகண்டன், முதல்வர் ஜெயக்குமார், ‘இந்து தமிழ் திசை’ விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார், செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் வேலவன் (திருவள்ளூர் மாவட்டம்), இணைச் செயலாளர் பாலாஜி (சென்னை மாவட்டம்) ஆகியோர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கலில் உள்ள அம்ரிதா விஷ்வ வித்யா பீடத்தின் சென்னை வளாக அரங்கில் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ செஸ் போட்டியைத் தொடங்கி வைத்து பேசும் மாவட்ட ஆட்சியர் பிரதாப். உடன், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாக இயக்குநர் ஐ.பி.மணிகண்டன், முதல்வர் ஜெயக்குமார், ‘இந்து தமிழ் திசை’ விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார், செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் வேலவன் (திருவள்ளூர் மாவட்டம்), இணைச் செயலாளர் பாலாஜி (சென்னை மாவட்டம்) ஆகியோர்.

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. அது ஒருவரின் ஒட்டு மொத்த ஆளுமையையும் மேம்படுத்தக் கூடியதாகும். விளையாட்டு, பொழுது போக்கு என எல்லா வற்றையும் சேர்ந்து மாணவ மாணவிகள் கற்கும் கல்விதான் முழுமையான கல்வியாகும்.

அதில் விளையாட்டுகளை ஊக்கு விப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, சதுரங்க விளையாட்டு மிகவும் முக்கியமானது. சதுரங்க விளையாட்டை சாதாரணமாக எல்லோராலும் விளையாட முடியாது. சதுரங்கம் விளையாட தனித்திறமை வேண்டும்.

நம்மை எதிர்த்து விளையாடுபவர், பல்வேறு யூகங்களை வகுத்து விளையாடுவார். ஆகவே, அவரை ஒரு யூகத்தால் வீழ்த்த முடியாது. ஒரு நொடிப்பொழுதில் காயை நகர்த்தி விளையாடுவதில்தான் வெற்றி, தோல்வி உள்ளது.

வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய இளம் செஸ் வீரர் எஃப் எம்.சார்வி அனில்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினர்கள்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய இளம் செஸ் வீரர் எஃப் எம்.சார்வி அனில்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினர்கள்.

இந்தி யாவில் உள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் நமது மாநிலத்துக்குப் பெருமையாகும். ஆண்டுக்கு 4 அல்லது 5 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகிக்கொண்டே இருப்பது தமிழ கத்துக்கு மிகவும் பெருமையான விஷயம்.

தமிழகத்தில் உள்ள சதுரங்க கிளப் மற்றும் பயிற்சிகள் காரணமாக, நகர்ப்புறங்களில் மட்டும் தெரிந்து வந்த சதுரங்க விளையாட்டு, தற்போது கிராமப்பகுதிகளிலும் பரவலாகியுள்ளது.

குறிப்பாக, கடந்த2022-ம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் நடைபெற்ற 44-வது சர்வ தேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு அதிக அளவில் கிராம மாணவ, மாணவிகளிடமும் சதுரங்கப் போட்டி பிரபலமாகியுள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக வேண்டும்.

போட்டியில் வெற்றிபெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்த சீனியர் - ஜூனியர் மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்.

போட்டியில் வெற்றிபெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்த சீனியர் - ஜூனியர் மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்.

அவ்வாறு உருவாகும் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் பட்டிய லில், இன்றைய போட்டியில் பங்கேற் றுள்ள மாணவ-மாணவிகளும் இடம்பெற வேண்டும்.

அதற்கு ‘இந்து தமிழ் திசை’ மாதிரியான நிறுவனங்கள், தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் போன்ற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

தொடர்ந்து நடைபெற்ற சதுரங்கப் போட்டி, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஜூனியர் பிரிவு, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவி

களுக்கு சீனியர் பிரிவு என இரு பிரிவு களாக நடத்தப்பட்டது. காலை முதல், மாலை வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

சீனியர் பிரிவில் பிசிஎஸ் ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆ.லோகேஷ்குமார் முதலிடம், அரக்கோணம் பாரதிதாசனார் குரூப் ஆஃப் ஸ்கூல் மாணவர் பி.ரிஷிகேசவா இரண்டாமிடம், ஆவடி கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர் எஸ்.இன்பா இளவரசன் மூன்றாமிடம் பெற்றனர்.

ஜூனியர் பிரிவில் முகப்பேர் டிஏபி ஆண்கள் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் ஆர்.அஷ்வ சண்முகம் முதலிடம், ஜிகேவிவி சீனியர் செகண்ட்ரி பள்ளி மாணவர் டி.எஸ்.சரத் இரண்டாமிடம், ஆலப் பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் எஸ்.ஐ.பர்திநாராயண் மூன்றாமிடம் பிடித்தனர்.

பரிசு வழங்கினார் சார்வி: போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பாலசாகித்ய விருதாளரும், இளம் செஸ் வீரருமான எஃப்.எம்.சார்வி அனில்குமார் பரிசுகளை வழங்கினார். ஜூனியர் பிரிவில் 27 மாணவர்களும், சீனியர் பிரிவில் 27 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு, அவர் களுக்குப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழாக்களில், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாக இயக்குநர் ஐ.பி.மணிகண்டன், முதல்வர் டாக்டர் வி.ஜெயக் குமார், `இந்து தமிழ் திசை' விளம்பரப் பிரிவு பொதுமேலாளர் வி.சிவகுமார், திருவள்ளூர் மாவட்ட செஸ்அசோசி யேஷன் துணைத் தலைவர் மற்றும் வேலம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் செஸ் ஒருங்கிணைப்பாள ருமான எஸ்.வேலவன், திருவள்ளூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் ரங்கா நாச்சியார், சென்னை மாவட்ட செஸ் அசோசியேஷன் இணைச் செயலாளர் பாலாஜி மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார்.

விளையாட்டும் பொழுதுபோக்கும் சேர்ந்ததே கல்வி: சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆட்சியர் எம்.பிரதாப் வலியுறுத்தல்
பாக்மதி விரைவு ரயில் விபத்தில் சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநருக்கு விசிஷ்ட சேவா விருது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in