பாக்மதி விரைவு ரயில் விபத்தில் சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநருக்கு விசிஷ்ட சேவா விருது

பாக்மதி விரைவு ரயில் விபத்தில் சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநருக்கு விசிஷ்ட சேவா விருது
Updated on
1 min read

சென்னை: கவரைப்​பேட்​டை​யில் பாக்​மதி விரைவு ரயில் விபத்​தின்​போது, சாதுர்​ய​மாக செயல்​பட்ட ரயில் ஓட்​டுநர் சுப்​பிரமணி உட்பட 11 பேருக்கு விசிஷ்ட ரயில் சேவா விருதுகள் வழங்​கப்​பட்​டன.

இந்​திய ரயில்வேயில் கடந்த ஆண்டு சிறப்​பாக பணி​யாற்​றிய 100 அதி​காரி​கள், ஊழியர்​களுக்கு விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்​கார் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

டெல்​லி​யில் கடந்த 9-ம் தேதி நடந்த நிகழ்ச்​சி​யில், ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். நிதி, எலெக்​ரிக்​கல் மற்​றும் சுற்​றுச்​சூழல் பிரிவு​களில் தெற்கு ரயில்​வேக்​கான 3 கேட​யங்​களை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங்​கிடம் அமைச்​சர் வழங்​கி​னார்.

தெற்கு ரயில்வேயின் துணை நிதி ஆலோ​சகர் ஆனந்த்​ பன்​டி​யா, மதுரை கோட்டை மூத்த வணிக மேலா​ளர் கணேஷ், திரு​வனந்​த​புரம் முது​நிலை டெலி​காம் பொறி​யாளர் ரஞ்​சித், தலைமை சுகா​தா​ரத்​துறை ஆய்​வாளர் பிரமோத், ரயில்பாதை பராமரிப்​பாளர் பவன்​கு​மார், ரயில் ஓட்​டுநர் சுப்​பிரமணி உட்பட 11 பேருக்கு விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்​கார் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

கர்​நாடக மாநிலம் மைசூரு​வில் இருந்து பிஹார் மாநிலம் தர்​பங்கா​வுக்கு புறப்​பட்ட பாக்​மதி அதி​விரைவு ரயில், கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபர் 11-ம் தேதி திரு​வள்​ளூர் மாவட்​டம் கவரைப்​பேட்டை ரயில் நிலை​யம் அருகே சென்​ற​போது, ஏற்​கெனவே நின்று கொண்​டிருந்த சரக்கு ரயில் மீது மோதி​யது.

அந்த ரயி​லின் 13 பெட்​டிகள் தடம்​புரண்​ட​தில் 19 பேர் காயமடைந்​தனர், அதிர்​ஷ்ட​வச​மாக உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்​லை. இந்த விபத்து குறித்​து, ஆய்வு மேற்​கொண்ட தென் மண்டல ரயில்வே பாது​காப்பு ஆணை​யரக அதி​காரி​கள் குழு, பாக்​மதி அதி​விரைவு ரயிலை இயக்​கிய ஓட்​டுநர் சுப்​பிரமணி, துரித​மாக செயல்​பட்டு அவசர​கால பிரேக்கை பயன்​படுத்​தி​ய​தால் பெரும் விபத்து தவிர்க்​கப்​பட்​ட​தாக அறிக்கை அளித்​தனர். இந்நிலை​யில் அவரை பாராட்டி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்​கார் விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

பாக்மதி விரைவு ரயில் விபத்தில் சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநருக்கு விசிஷ்ட சேவா விருது
மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம்: திமுக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in