ஜூலை மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஜூலை மாதம் நடை​பெற்ற 10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவு​கள் இன்று (புதன்​கிழமை) வெளி​யிடப்​படும் என அரசு தேர்​வுத்​துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் ந.லதா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 10-ம் வகுப்பு துணை தேர்​வு​கள் ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றன. இத்​தேர்வை 66,488 மாணவர்​கள் எழு​தினர். தேர்வு முடிவு​கள் 5-ம் தேதி (இன்​று) வெளியிடப்​படு​கின்​றன. தற்​காலிக மதிப்​பெண் சான்​றிதழை அரசு தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) புதன்​கிழமை பிற்​பகல் முதல் தேர்​வெண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதி​விறக்​கம் செய்​து​ கொள்​ளலாம்.

ஜெராக்ஸ் பிரதி: விடைத்​தாள் நகல் பெற விண்​ணப்​பிக்க விரும்​பும் தனித்​தேர்​வர்​கள் அதற்​கான விண்​ணப்​பத்தை அரசு தேர்​வுத்​றை​யின் இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10 மற்​றும் 11-ம் தேதி சம்​பந்​தப்​பட்ட மாவட்ட அரசு தேர்​வு​கள் உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில நேரில் ஒப்​படைக்க வேண்​டும். விடைத்​தாள் கட்​ட​ணத்​தை​யும் அங்​கேயே பணமாக செலுத்​தி​விடலாம். ஒரு பாடத்​துக்கு கட்​ட​ணம் ரூ.275. உதவி இயக்​குநர் அலு​வலக முகவரியை தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் அறிந்து ​கொள்​ளலாம்.

புதி​தாக தொடங்​கப்​பட்ட மாவட்​டங்​களான தென்​காசி, ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்​சி, செங்​கல்​பட்​டு, மயி​லாடு​துறை மாவட்​டங் களைச் சேர்ந்த மாணவர்​கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலு​வலுகத்​தில் விண் ணப்​பத்​தை​யும் கட்​ட​ணத்​தை​யும் சமர்ப்​பிக்க வேண்​டும். விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்​தவர்​களுக்கு மறுகூட்​டல், மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிக்க வாய்ப்பு அளிக்​கப்​படும். இதுதொடர்​பான அறி​விப்பு பின்​னர் வெளி​யிடப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in