ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு தொடங்கியது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் பணி​களுக்​கான சிவில் சர்​வீஸ் மெயின் தேர்வு நேற்று தொடங்​கியது.

ஐஏஎஸ். ஐஎப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ். உள்​ளிட்ட உயர் பதவி​களுக்​கான சிவில் சர்​வீசஸ் தேர்வை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்தி வரு​கிறது. இது முதல்​நிலை, மெயின் மற்​றும் நேர்​முகத்​தேர்வு என 3 கட்​டங்​களாக நடத்​தப்​படு​கிறது. இந்த ஆண்டு 933 பணி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் சிவில் சர்​வீசஸ் தேர்​வுக்​கான அறி​விப்பு கடந்த பிப்​ர​வரி 4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான, முதல்​நிலை தேர்வு மே மாதம் 24-ம் தேதி நடத்​தப்​பட்​டு, தேர்வு முடிவு வெளி​யிடப்​பட்டது.

இதில் தமிழக மாணவர்​கள் 651 பேர் உள்பட நாடு முழு​வதும் 13,343 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்​வுக்கு தகுதி பெற்​றனர். இந்​நிலை​யில், சிவில் சர்​வீஸ் மெயின் தேர்வு நேற்று தொடங்​கியது. தமிழ்​நாட்​டில் சென்னை மட்​டும் தேர்வு மையம் ஆகும். எழும்​பூர் மாநில மகளிர் மேல்​நிலைப்​பள்ளி உள்பட 3 மையங்​களில் 646 பேர் தேர்​வெழு​தினர். தேர்​வில் 5 மாணவர்​கள் பங்​கேற்​க​வில்லை என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதி​யம் 12 மணி வரை நடை​பெற்​றது. தேர்​வில் முறை​கேடு​களை தடுக்​கும் வகை​யில் கடும் சோதனை​களுக்கு பிறகே தேர்வு மையங்​களுக்​குள் தேர்​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். தொடர்ந்து ஆக.22, 23-ம் தேதி​களி​லும், அதன் பிறகு ஆக. 29, 30-ம் தேதி​களி​லும்​ தேர்​வு நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in