அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ‘போனஃபைடு’ சான்று கட்டாயம் இல்லை

அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ‘போனஃபைடு’ சான்று கட்டாயம் இல்லை
Updated on
1 min read

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் விண்​ணப்​பிக்​கும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ‘போனஃபைடு’ சான்​றிதழ் கட்​டா​யம் இல்லை என்று மருத்​து​வக்கல்வி இயக்​குநரகம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்​வுக்கு விண்​ணப்​பிப்​பது சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் (www.tnmedicalselection.org) கடந்த 29-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. ஆன்​லைனில் மாணவ, மாணவி​கள் ஆர்​வத்​துடன் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த இடஒதுக்​கீட்​டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்​கள், தாங்கள் படித்த பள்​ளி​களில் ‘போனஃபைடு’ சான்​றிதழ் பெற்று விண்​ணப்​பித்து வந்​தனர்.

அந்த பள்​ளி​யில் படித்த மாணவர்​தான் என்​பதை உறு​திப்படுத்த, இச்​சான்​றிதழ் பெறப்​பட்​டது. இந்​நிலை​யில், மருத்​து​வப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க, ‘போனஃபைடு’ சான்​றிதழ் தேவை​யில்லை என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மருத்​து​வக் கல்​வி, ஆராய்ச்சி இயக்​ககத்​தின் மாணவர் தேர்​வுக் குழு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், ‘மருத்​து​வப் படிப்​பில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் சேரும் மாணவர்​களில், 2022- 23-ம் ஆண்டு மற்​றும் அதற்கு பிந்​தைய ஆண்​டு​களில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் விண்​ணப்​பத்​தில், ‘போனஃபைடு’ சான்​றிதழ் இணைக்​கத் தேவை​ யில்​லை.

அவர்​களது தகுதி உள்​ளிட்ட விவரங்​கள், பள்​ளிக்​கல்​வித் துறை​யின் ‘எமிஸ்’ தகவல் அமைப்பு மூலம் உறுதி செய்து கொள்​ளப்​படும்’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ‘போனஃபைடு’ சான்று கட்டாயம் இல்லை
சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in