கல்வியியல் கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் கலந்தாய்வு

கல்வியியல் கல்லூரிகளில் இன்று முதல் பிஎட் கலந்தாய்வு
Updated on
1 min read

சென்னை: அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் சேரு​வதற்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு இன்று தொடங்​கு​கிறது.

2026-27-ம் கல்வி ஆண்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்​தது. மொத்​தம் 5,900 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர். இதைத் தொடர்ந்​து, மாணவர்​களின் தரவரிசைப் பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், மாணவர்​கள் தங்​கள் விருப்​பக் கல்​லூரியை தேர்வு செய்​வதற்கான ஆன்லைன் கலந்​தாய்வு இன்று தொடங்குகிறது. இக்​கலந்​தாய்வு 10-ம்தேதி வரை நடை​பெறும். மாணவர்களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை 14-ம் தேதி ஆன்​லைனில் வழங்​கப்படும். www.twise.ac.in என்ற இணை​யதளத்தில் இருந்து அவர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​வி​யியல் கல்​லூரி​களில் ஆக.17 முதல் 21-ம் தேதிக்​குள் சேர வேண்டும். திட்​ட​மிட்​டபடி, அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வியியல் கல்​லூரி​களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆக.24-ம் தேதி தொடங்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in