உயர்கல்வி சேவையை பாராட்டி வேலூர் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதனுக்கு ‘உலக தமிழர் மாமணி’ விருது

மொரீஷியஸில் நடந்த உலகத்  தமிழர் பொருளாதார மாநாட்டில் விஐடி துணைத்  தலைவர் சேகர் விசுவநாதனுக்கு 'உலகத் தமிழர் மாமணி' விருது வழங்கிய மொரீஷியஸ் நாட்டின் அதிபர் தரம்பீர் கோகுல்.

மொரீஷியஸில் நடந்த உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதனுக்கு 'உலகத் தமிழர் மாமணி' விருது வழங்கிய மொரீஷியஸ் நாட்டின் அதிபர் தரம்பீர் கோகுல்.

Updated on
1 min read

வேலூர்: வேலூர் விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதனுக்​கு ’உலக தமி​ழர் மாமணி’ விரு​தினை மொரீஷியஸ் அதிபர் தரம்​பீர் கோகுல் வழங்​கி​னார்.

13-வது உலக தமி​ழர் பொருளா​தார மாநாடு மற்​றும் உலக பொருளா​தார உச்சி மாநாடு, செப்​.11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மொரீஷியஸில் நடை​பெற்​றது. இதில், 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்த அதி​காரி​கள், அமைச்​சர்​கள், பொருளா​தார வல்​லுநர்​கள், முதலீட்​டாளர்​கள் உள்பட 200-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​ற​னர்.

மாநாட்​டில் சர்​வ​தேச முதலீடு​கள், புதிய வணிக தொடர்​பு​கள், செயற்கை நுண்​ணறி​வு, நிதி சேவை​கள், சுகா​தா​ரம், உயர்​ கல்​வி, புத்​தொழில்​கள், உலகளா​விய வர்த்​தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டன. உலகத் தமி​ழர் பொருளா​தார மாநாட்​டில் உயர்​கல்வி சேவையை பாராட்டி இதில் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்ட வேலூர் விஐடி துணைத்​ தலை​வர் சேகர் விசுவ​நாதனுக்​கு, ‘உல​கத் தமி​ழர் மாமணி’​என்ற விருது வழங்​கி கவுரவிக்கப்​பட்​டது.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்​சர் ராஜ்மோகன், சென்னை வளர்ச்சி கழகத்​தின் தலை​வ​ரும் உலக தமி​ழர் பொருளா​தார கழகத்​தின் தலை​வ​ரு​மான வி.ஆர்​.எஸ்​. சம்​பத் உள்பட பலர் இம்மாநாட்டில் கலந்​து ​கொண்​டனர். அதே​போல பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கிய தமி​ழர்​களுக்​கு ‘உலகத்​ தமி​ழர் மாமணி’ விருது வழங்​கப்பட்​டது.

<div class="paragraphs"><p>மொரீஷியஸில் நடந்த உலகத்  தமிழர் பொருளாதார மாநாட்டில் விஐடி துணைத்  தலைவர் சேகர் விசுவநாதனுக்கு 'உலகத் தமிழர் மாமணி' விருது வழங்கிய மொரீஷியஸ் நாட்டின் அதிபர் தரம்பீர் கோகுல்.</p></div>
ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் முதல்வர் விஜய்: உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in