உதவி பேராசிரியர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புகார்கள் குறித்து விளக்கம்

உதவி பேராசிரியர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புகார்கள் குறித்து விளக்கம்
Updated on
1 min read

சென்னை: அரசுக் கல்​லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவு​கள் தொடர்​பாக எழுப்​பப்​பட்ட 2 புகார்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் விளக்​கம் அளித்​துள்​ளது.

தமிழகத்​தில் உள்ள அரசு கலை, அறி​வியல், கல்​வி​யியல் கல்​லூரி​களில் உதவி பேராசிரியர் பதவி​யில் 2,708 காலி இடங்​களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) கடந்த 2025 டிச.27-ம் தேதி எழுத்​துத் தேர்வு நடத்​தி​யது. 42,064 பேர் பங்​கேற்​றனர். டிஆர்பி இணை​யதளத்​தில் தேர்வு முடிவு​கள் ஜூன் 25-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. இதில் பல குளறு​படிகள் உள்​ள​தாக புகார்​கள் எழுந்​தன. மதிப்​பெண் பட்​டியலில் ஒரு தேர்​வரின் பிறந்த ஆண்டு 2006 என்று இருந்​தது. 20 வயது மட்​டுமே நிரம்​பிய ஒரு​வர் எப்​படி முது​நிலைப் படிப்பை முடித்​து, உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு எழுத முடி​யும் என்​றும் கேள்வி எழுந்​தது.

இந்​நிலை​யில், புகார்​களுக்கு விளக்​கம் அளிக்​கும் வித​மாக டிஆர்பி தலை​வர் எஸ்​.ஜெயந்தி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இணை​யதளத்​தில் 56 பாடங்​கள் தொடர்​பான மதிப்​பெண் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் ஒரு தேர்​வர் தனது ஆன்​லைன் விண்​ணப்​பத்​தில் பிறந்த தேதியை குறிப்​பிடும்​போது 1991-க்கு பதிலாக 2006 என்று தவறாக பதிவேற்​றம் செய்​துள்​ளார். அவர் குறிப்​பிட்ட தேதி​யுடன் மதிப்​பெண் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இன்​னொரு தேர்​வர் தனது விண்​ணப்​பத்​தில் பெயருக்கு பதிலாக, தவறு​தலாக 10-ம் வகுப்பு மதிப்​பெண் சான்​றிதழ் எண்ணை பதிவேற்​றம் செய்​துள்​ளார். கடந்த டிச.22-ம் தேதி தனது பெயரில் திருத்​தம் கோரி டிஆர்​பிக்கு விண்​ணப்​பித்​தார். அவர் அளித்த விவரம் உறுதி செய்​யப்​பட்​டு, தேர்வு எழுத​வும் அனு​ம​திக்​கப்​பட்​டார். எனினும், அவர் ஏற்​கெனவே சமர்ப்​பித்த பெயர், விவரங்​கள் அடிப்​படை​யிலேயே ஹால் டிக்​கெட் வழங்​கப்​பட்​டு, தேர்வு மதிப்​பெண்​ணும் வெளி​யிடப்​பட்​டது.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

உதவி பேராசிரியர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புகார்கள் குறித்து விளக்கம்
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in