

சென்னை: கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஆண்டுதோறும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்கள், நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ. 18 லட்சம் பெறுமானமுள்ள உதவித் தொகைகள் பகிர்ந்தளிக்கப்படும்.
2026–2027 கல்வி ஆண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்ததற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும். பிளஸ் ஒன், பிளஸ் டூ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கடைசியாக எழுதிய பரீட்சையில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உடைய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூலை 31. இது தொடர்பான மற்ற விவரங்களை https://kalkionline.com/ என்ற இணையதளத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.