“ஆண்டு சம்பளம் ரூ.14.4 லட்சம்...” - அஃப்ரின் பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

அஃப்ரின்

அஃப்ரின்

Updated on
3 min read

வணக்கம். என் பெயர் அஃப்ரின். நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவள். நான் கோயம்புத்தூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - எட்டாவது செமஸ்டர் படித்து கொண்டு இருக்கிறேன். நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில்தான் படித்தேன். அதன் பிறகும் அரசு கல்லூரியில்தான் சேர்ந்தேன்.

என் அப்பா கூலி வேலை செய்கிறார். எங்கள் வீட்டில் பெரிய கனவுகள் இருந்தாலும், அதை அடைய வழி தெரியாமல் இருந்தோம். அந்த நேரத்துல தான் நான் முதல்வன் திட்டம் எங்கள் கல்லூரிக்கு வந்துச்சு. முதல் வருடத்திலிருந்து எங்களுக்கு Spoken English கற்றுக் கொடுத்தாங்க. எப்படி நம்பிக்கையா பேசணும், எப்படி Interview attend பண்ணணும், எப்படி நம்ம திறமையை வெளிப்படுத்தணும் - ஒவ்வொன்றாக கற்றுக்கொடுத்தாங்க.

அடுத்தடுத்த வருடங்களில் Technical Skills, Software Training, Industry Exposure- இவையெல்லாம் எங்களுக்கு பெரிய மாற்றம் கொடுத்தது. நாங்கள் படித்தது புத்தகத்துல மட்டும் இல்ல... வேலைக்கு தயாராக படித்தோம். அதன் பலனாக - ஏழாவது செமஸ்டரிலேயே நான் Placement ஆனேன். அது சாதாரண கம்பெனி இல்ல. துபாயில் உள்ள Shoba Construction நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. எங்கள் கல்லூரியில் அந்த வருடம் கிடைத்த உயர்ந்த சம்பளம் - 14.4 லட்சம் ரூபாய் வருட சம்பளம். அந்த Offer letter வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போன நாளை நான் மறக்க முடியாது. என் அப்பா கண்ணீர் விட்டார்.

“நான் கூலி வேலை பார்த்ததுக்கு இப்போதான் அர்த்தம் வந்திருக்கு”ன்னு சொன்னார். என் அம்மா என்னை கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணுக்கு, கூலி தொழிலாளியின் மகளுக்கு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு - இது சாதாரண விஷயம் இல்ல. இந்த வாய்ப்பு எனக்கு மட்டும் இல்ல. என்னை மாதிரி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ஒரு பாதை இது.

என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு உலக அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி, திறமையை வேலை வாய்ப்பாக மாற்றிய நான் முதல்வன் திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “அரசு பள்ளியில் படித்தாலும்... அரசு கல்லூரியில் இருந்தாலும்... உலகம் நம்மை எதிர்பார்க்குது” என்பதற்கு நான் ஒரு சின்ன உதாரணம்...

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்:

என் பெயர் திவ்யா. நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவள். என் அப்பா விஜயகுமார். என் அம்மா தேவி. இருவரும் நெசவு தொழில்தான் செய்து குடும்பத்தை நடத்தினாங்க. நெசவு தொழில் என்றால் ஒரு நாள் உழைத்தால் தான் அந்த நாள் சாப்பாடு. ஓய்வு என்றே இல்லாத வாழ்க்கை. டிப்ளமோ வரை படித்தேன். படிச்சவுடன் வேலைக்கு போனால் குடும்பத்துக்கு உதவி ஆகணும்னு நினைச்சேன்.

ஆனா மூணு வருடம் வேலை பார்த்ததெல்லாம் இன்டர்ன்ஷிப் மாதிரி தான். நிரந்தர வேலை கிடைக்கல. எவ்வளவு நல்லா வேலை பார்த்தாலும் “அடுத்த வேலை தேடிக்கோங்க”ன்னு தான் சொல்லுவாங்க. அதுக்குள்ளே எங்கள் வாழ்க்கையையே மாற்றிய வெள்ளம் வந்துச்சு. நாங்கள் நதி கரையோரம் வசிச்சோம். ஒவ்வொரு டிசம்பர்லயும் வெள்ளம் வரும். ஆனால் 2022ல வந்த வெள்ளம் எங்களை முழுக்க மாற்றிட்டது.

300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டோம். வீடு இடிச்சு அகற்றப்பட்டது. ஒரே நாளில் வீடு இல்லாத குடும்பமா மாறிட்டோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை இல்ல. நெசவு தொழில் செய்ய இடமே இல்ல. நானும் வேலை இல்லாம இன்டர்வியூக்கு போய் திரும்பி வந்துக்கிட்டே இருந்தேன். வீட்டுல வருமானம் பூஜ்ஜியம். அந்த நேரத்துல தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை வந்துச்சு. ஒரு நாள் ஒரு கால் வந்தது. “First Solar இன்டஸ்ட்ரியில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு. கண்டிப்பா வந்து ஜாயின் பண்ணணும்”ன்னு. டிசம்பர் 12 - அந்த நாள் நான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன்.

<div class="paragraphs"><p>திவ்யா</p></div>

திவ்யா

முதல் நாளே சொன்னது - “நீங்கள் மலேசியா ட்ரெயினிங்க்கு போகணும்.” எங்க வீட்டுல பெண்கள் ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வரணும் என்பதுதான் வழக்கம். வெளியூர் போவது கூட பெரிய விஷயம். ஆனா என் அப்பா அம்மா என்னை நம்பி அனுப்பினாங்க. மலேசியாவில் மூணு மாதம் ட்ரெயினிங். அதுக்கு அப்புறம் என்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அமெரிக்காவுக்கும் அனுப்பினாங்க. நான் கனவில் கூட நினைக்காத நாடுகள். நெசவாளர் குடும்பத்துல பிறந்த நான், உலக வரைபடத்தில கூட சரியாக பார்க்காத நாடுகளுக்குப் போய் ட்ரெயினிங் எடுத்தேன்.

இன்று நான் சாதாரண டெக்னீஷியன் இல்ல. நான் ஒரு சூப்பர்வைசர். என்னிடம் பத்து பேர் வேலை செய்கிறாங்க. நான் லீட் பண்ணுற நிலைக்கு வந்திருக்கேன். டிப்ளமோ தான் என் கல்வியின் முடிவு என்று நினைத்தேன். ஆனா இப்போ என் இன்டஸ்ட்ரியின் சப்போர்ட்டோட இன்ஜினியரிங் படிச்சுட்டு இருக்கேன். ஒரு வெள்ளம் என் வீட்டை எடுத்துச்சு. ஆனா ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையை கட்டியெழுப்பிச்சு. இந்த வேலைவாய்ப்பு... இந்த ஆதரவு... என் குடும்பத்துக்கு மீண்டும் மரியாதை, நிலை, நம்பிக்கை கொடுத்துச்சு.

என்னைப் போன்ற சாதாரண குடும்ப பெண்ணுக்கு உலக அளவிலான வாய்ப்பை கொடுத்த இந்த அரசுக்கும், இளைஞர்களுக்கு நம்பிக்கை தந்த வெற்றி நிச்சயம் திட்டத்துக்கும், மிகவும் முக்கியமாக தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் சாதிப்பாங்க” என்பதற்கு நான் ஒரு சிறிய உதாரணம்.

மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/

<div class="paragraphs"><p>அஃப்ரின்</p></div>
சாமானிய மக்களின் தோழர் நல்லகண்ணு - ஓர் உறு​தி​மிக்க தலை​வரின் அரசியல் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in