முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம்

தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​.30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு (தொடக்​கக் கல்​வி) அவர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​.30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் கற்​றல் செயல்​பாட்டை நிறைவு செய்​யும் மாணவர்​களை அடுத்த வகுப்​புக்கு தேர்ச்சி அளிப்​பது. மாற்​றுச் சான்​றிதழ் வழங்​கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in