

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘டிட்வா’ புயலையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுகின்றன.
அதேபோல, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.