அண்ணா பல்கலை. தயாரித்த ‘பாவைக் கூத்து’ ஆவணப் படத்துக்கு உ.பி. கல்வி திரைப்பட விழாவில் விருது

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி திரைப்பட விழாவில், "பாவை கூத்து - மறந்துபோன மேடை நாடகம்" என்ற ஆவண படத்துக்காக சிறந்த பட விருதை அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.அருள்செல்வன் பெற்றுக்கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி திரைப்பட விழாவில், "பாவை கூத்து - மறந்துபோன மேடை நாடகம்" என்ற ஆவண படத்துக்காக சிறந்த பட விருதை அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.அருள்செல்வன் பெற்றுக்கொண்டார்.

Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகம் தயாரித்​துள்ள `பாவைக் கூத்​து- மறந்​து​போன மேடை நாடகம்' என்ற ஆவணப் படத்​துக்கு உ.பி. கல்வி திரைப்பட விழா​வில் சிறந்த ஆவணப் பட விருது கிடைத்​துள்​ளது.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கல்வி பல்​லூடக ஆராய்ச்சி மையம் (Educational Multimedia Research Centre-EMRC) சார்​பில் தமிழகத்​தின் பாரம்​பரியக் கலை​யான பாவைக் கூத்து கலை​யின் பாரம்​பரி​யத்தை வெளிக்​கொணரும் வண்​ணம் `பாவைக் கூத்​து- மறந்​து​போன மேடை நாடகம்' (Paavai Koothu – The Forgotten Theatre) என்ற பெயரில் ஆவணப் படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த மையத்தின் இயக்​குநர் எஸ்​.அருள்​செல்​வன் தயாரிப்​பில் அந்த மையத்​தைச் சேர்ந்த டி.​வினோத் ராஜேஷ் இயக்​கத்​தில் இப்​படம் உரு​வாகி​யுள்​ளது.

இந்த ஆவணப் படம், தமிழகத்​தின் பழங்​கால கலை​யான தோல் பாதைக் கூத்து கலை​யின் பாரம்​பரி​யத்​தை​யும், தோல் பாவை கலைஞர்​களின் வாழ்க்​கை, அவர்​கள் சந்​திக்​கும் போராட்​டங்​கள், அவர்​களின் பாரம்​பரி​யம் ஆகிய​வற்றை தத்​ரூப​மாகப் படம்​பிடித்​துக் காட்​டு​கிறது.

ரூ.50 ஆயிரம் பரிசு

இந்த நிலை​யில், உத்​தரப்​பிரதேச மாநிலம் கிரேட்​டர் நொய்​டா​வில் உள்ள கவுதம புத்தா பல்​கலைக்​கழகத்​தில் கடந்த 27, 28-ம் தேதி நடை​பெற்ற கல்வி திரைப்பட விழா​வில் அந்த ஆவணப்​படம் திரை​யிடப்​பட்டு சிறந்த ஆவணப் படமாக தேர்வு செய்​யப்​பட்​டது.

சிறந்த ஆவணப் பட விருதை அண்ணா பல்​கலைக்​கழக கல்வி பல்​லூடக ஆராய்ச்சி மைய இயக்​குநர் அருள்​செல்​வன் பெற்​றுக்​கொண்​டார்.

இந்த விருது ரூ.50 ஆயிரம் பரிசு மற்​றும் பாராட்​டுச் சான்று ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது ஆகும். சிறந்த ஆவணப் பட விருது பெற்​றதற்​காக அருள்​செல்​வன், வினோத் ராஜேஷ் ஆகியோ​ருக்கு அண்ணா பல்​கலைக்​கழகப் பதி​வாளர் வி.குமரேசன்​ வாழ்த்​து தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி திரைப்பட விழாவில், "பாவை கூத்து - மறந்துபோன மேடை நாடகம்" என்ற ஆவண படத்துக்காக சிறந்த பட விருதை அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.அருள்செல்வன் பெற்றுக்கொண்டார்.</p></div>
பரந்தூர் விமான நிலையத் திட்ட நிலங்களில் சாகுபடி: நெல் கொள்முதலில் சிக்கல்; விவசாயிகள் வேதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in