‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதுக்கான நேர்காணல் முடிவுகள் விரைவில் வெளியாகும்

நேர்காணலில் கலந்துகொண்ட நடுவர் குழுவினர். படம்:பிரபு

நேர்காணலில் கலந்துகொண்ட நடுவர் குழுவினர். படம்:பிரபு

Updated on
2 min read

சென்னை: ​ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனத்​துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்​கும் ‘அன்​பாசிரியர்’ விருதுக்​காக இணை​ய​வழி​யில் நடத்​தப்​பட்ட நேர்​காணலில் ஆசிரியர்​கள் பலர் ஆர்​வ​முடன் கலந்​து​கொண்​டனர்.

மாணவர்​களுக்கு தனித்​து​வ​மிக்க கல்​வியை அளிப்​பதுடன், மாறு​பட்ட சிந்​தனை உடன் செயல்​பட்டு பள்​ளிக்​குப் பெருமை சேர்க்​கும் அர்ப்​பணிப்​புமிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்​றும் தனி​யார் பள்​ளி​களின் (மாநிலப் பாடத்​திட்​டம்) ஆசிரியர்​களை கவுரவிக்​கும் வித​மாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில் ‘அன்​பாசிரியர்’ விருது 2020-ம் ஆண்டு முதல் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அந்​தவகை​யில் 6-வது முறை​யாக அன்​பாசிரியர் விருதுகளை ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனத்​துடன் சேர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்​க​வுள்​ளது. இதன் பங்​கு​தா​ரர்​களாக ராஜலட்​சுமி பொறி​யியல் கல்​லூரி, பொன்​வண்டு மேட்​டிக் லிக்​யூடு, மதுரை சாந்​தாஸ் சில்க்​ஸ், பிஎஸ்​ஆர் சில்க்ஸ் சாரீஸ் மற்​றும் இந்​தியஆயுள் காப்​பீட்​டுக் கழகம் (எல்​ஐசி)ஆகியவை இணைந்​துள்​ளன.

இந்த விருதுக்​குத் தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள 40 மாவட்​டங்​களில் இருந்து 450-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்​தனர். அதில் முதல்​கட்​ட​மாகத் தேர்​வான மதுரை, திருச்சி ஆகிய மண்​டலங்​களைச் சேர்ந்த ஆசிரியர்​களுக்​குக் கடந்த ஆக.16-ம் தேதி நேர்​காணல் நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து சென்​னை,கோவை மண்​டலங்​களைச் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு இணை​ய​வழி நேர்​காணல் நேற்று நடை​பெற்​றது. இதில் ஏராள​மான ஆசிரியர்​கள் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றனர்.

இந்த நேர்​காணலில் சென்னை மாநிலக் கல்​லூரி தமிழ்த்​துறை பேராசிரியர் சு.செல்​வகு​மாரன், சென்னை அடை​யாறு பாட்​ரிஷியன் கல்​லூரி தமிழ்த்​துறை பேராசிரியர் தனஞ்​செயன், சென்னை சவீதா மருத்​துவ மற்​றும் தொழில்​நுட்ப அறி​வியல் நிறு​வனத்​தின் பொறி​யியல் கல்​லூரி இணைத் தலை​வர் ஜுடி கோபால், வடபழனி ஆவிச்சி கலை அறி​வியல் கல்​லூரி தமிழ்த்​துறை தலை​வர் பிர​பாவ​தி, கிண்டி நோய்த்​தடுப்பு மற்​றும் ஆய்வு நிறுவன பேராசிரியர் தில​கவ​தி, ராணிமேரி கல்​லூரி தமிழ்த்​துறை பேராசிரியர் கஸ்​தூரி​பாய், தமிழ்​நாடு திறந்​த நிலை பல்​கலைக்​கழக சிறப்பு கல்​வி​யியல் பேராசிரியர் இரா.​மு. தமிழ்செல்​வன், ஸ்டெல்லா மேரீஸ் கல்​லூரி சமூகப்பணி துறை பேராசிரியர் மாதவி ஆகியோர் நடு​வர்​களாக செயல்​பட்​டனர்.

இதுகுறித்து நடு​வர்​கள் கஸ்​தூரி​பாய், தமிழ்​செல்​வன் ஆகியோர் கூறும்​போது, “ஆசிரியர்​களே ஒரு சமூகம் வளர்ச்சி பெற முக்​கிய பங்​காற்​றுகின்​றனர். அவர்​களைக் கவுரவிக்​கும் வித​மாக வழங்​கப்​படும் இந்து தமிழ் திசை நாளிதழின் அன்​பாசிரியர் விருது திட்​டம் சிறப்​பான முன்​னெடுப்​பாகும்.

அது​வும் அன்​பாசிரியர் என்ற பெயரில் விருது வழங்​கு​வது மிக​வும் பொருத்​த​மான​தாக இருக்​கும். ஆசிரியர்​கள் பலர் கற்​பித்​தலை​யும் தாண்டி பல்​வேறுதனிச்​செயல்​பாடு​களை மேற்​கொண்டு வரு​வது பாராட்​டுக்​குரிய​தாகும். இத்​தகைய விருதுகள் ஆசிரியர்​கள் தங்​களைப் புதுப்​பித்​துக் கொள்ள வழி​வகுக்​கும். அவர்​களு​டன் கலந்​துரை​யாடு​வது எங்​களுக்​கும் ஊக்​கமளிப்​ப​தாக இருக்​கிறது” என்​றனர்.

முன்​ன​தாக நேர்​காணலில் கற்​பித்​தலில் புதிய உத்​தி​களைப் பயன்​படுத்​துதல், புத்தக வாசிப்​பு, மாணவர் நலன், பள்​ளி​யில் சேர்க்​கையை உயர்த்​துதல் உள்பட பல்​வேறு அம்​சங்​களை முன்​வைத்து ஆசிரியர்​களிடம் கேள்வி​கள் முன்​வைக்​கப்​பட்​டன. அதனுடன் ஆசிரியர்​களின் தனிச்​சிறப்​பு​கள் சார்ந்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டன. இதற்​கிடையே நேர்​காணல் முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படும்.

அதன்​படி மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 40 ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ‘அன்​பாசிரியர்’ விருது சென்னை தி.நகர் வாணி மகாலில் ஆக.29-ம் தேதி வழங்​கப்​படும். மேலும், பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் இந்த விருதுகளை வழங்கி சிறப்​பிக்​க​வுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>நேர்காணலில் கலந்துகொண்ட நடுவர் குழுவினர். படம்:பிரபு</p></div>
வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in