“என் வாழ்வின் திருப்புமுனை...” - புவனேஸ்வரி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

“என் வாழ்வின் திருப்புமுனை...” - புவனேஸ்வரி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்
Updated on
3 min read

வணக்கம்! “கல்வி தான் சிறந்த செல்வம்” என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை என் வாழ்க்கை முழுவதும் உணர்ந்தவள் நான். என் பெயர் புவனேஸ்வரி. தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாரியம்பட்டி என்ற ஒரு சிறிய கிராமம் தான் என் சொந்த ஊர். எங்கள் குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம்.

என் அப்பாவும் அம்மாவும் வயலில் உழைத்து, வியர்வையை சொட்டச் சொட்டச் சம்பாதித்த பணத்தில்தான் என்னை படிக்க வைத்தார்கள். நான் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் தான் படித்தேன். நல்ல மதிப்பெண் எடுத்தபோது என் பெற்றோரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி இன்னும் என் மனதில் பதிந்திருக்கிறது.

விவசாய பின்னணியில் வளர்ந்ததால், எனக்கும் இயற்கையாகவே விவசாயத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதனால்தான் நான் Kumaraguru Institute of Agriculture-ல் B.Sc. Agriculture படிப்பை தேர்வு செய்து முடித்தேன். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே, “என் குடும்பத்தின் கஷ்டத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டும்... நல்ல வேலையில் சேர்ந்து அவர்களுக்கு நிம்மதி தர வேண்டும்...” என்ற எண்ணம் என்னை தொடர்ந்து வழி நடத்தியது.

அதனால் கல்லூரி படிப்புடன் சேர்த்து போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக ஆரம்பித்தேன். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சேலம் பயிற்சி நிலையத்தில் SSC, ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு தரமான பயிற்சி, சிறந்த வகுப்பறை வசதி, உணவு மற்றும் தங்குமிடம், கணினி ஆய்வகம், தனி படிப்பு அறை, புத்தகங்கள், தேர்வுக்கு தனி கவனம் என அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன.

அவர்கள் அளித்த பயிற்சியின் பலன்தான் இன்று நான், ஒரு தமிழ் வழி கல்வி பெற்ற கிராமத்து பெண்ணாக இருந்த எனக்கு இந்தப் பயணம் எளிதானதல்ல. மொழி சவால்கள், தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தம் - பல தடைகளை சந்தித்தேன். ஆனால் ஒவ்வொரு தடையும் என்னை இன்னும் உறுதியானவளாக மாற்றியது.

2024-25 ஆம் ஆண்டு நடைபெற்ற Institute of Banking Personnel Selection (IBPS) தேர்வில் நான் வெற்றி பெற்றேன். அந்த நாள்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. என் பெற்றோரின் கண்களில் வந்த ஆனந்தக் கண்ணீர் - அதுதான் என் உண்மையான வெற்றி. அதுதான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய பரிசு.

இப்போது நான் Punjab National Bank-இல் Agricultural Officer ஆக பணியாற்றி வருகிறேன். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, இன்று விவசாயிகளுக்காகவே பணியாற்றும் நிலைக்கு வந்திருப்பது எனக்கு பெருமை மட்டுமல்ல - அது என் வாழ்க்கையின் அர்த்தம்.

இன்று நான் இந்த வேலையில் இருப்பது, என் அப்பா அம்மா வயலில் உழைத்த உழைப்பின் பலன். அவர்களின் கனவுகளும், என் உழைப்பும் இணைந்து இந்த உயரத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. என் வாழ்க்கையின் உண்மை... கல்வி எனக்கு ஒரு பட்டம் மட்டும் அல்ல... அது என் குடும்பத்தின் கனவுகளை நனவாக்கிய சக்தி. என் வாழ்க்கையை ஒளிர வைத்த ஒளி. என் எதிர்காலத்தை கட்டியெழுப்பிய அடித்தளம். கல்வி தான் உண்மையான செல்வம்.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்: என்னுடைய பெயர் டோனியா. நான் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவள். நான் ஒரு மாற்று திறனாளி, தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தில் Special B.Ed படிப்பை முடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது வெற்றி நிச்சயம் திட்டம் தான். நான் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் மூலம் Data Entry Operator பாடத்தை கர்ண வித்யா foundation-ல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. Basic Computer முதல் Advanced Level Excel, PowerPoint வரை மிக விரிவாக கற்றுக்கொடுத்தார்கள்.

குறிப்பாக, Screen Reader Support உதவியுடன் நாங்கள் கம்ப்யூட்டரை கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. அந்த உதவி இல்லையென்றால் நான் இன்று இந்த நல்ல நிலைக்கு வந்திருக்க முடியாது. இன்று நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் வெற்றி நிச்சயம் மூலம் அளித்த பயிற்சி அந்த screen reader support தான். அது எனக்கு ஒரு புதிய உலகத்திற்கான கதவை திறந்து வைத்தது.

இப்போது நான் ICT பாடத்திற்கு பயிற்சி அளித்து வருகிறேன். கல்லூரி மாணவர்களுக்கு நான் கற்றதை பகிர்ந்து கொடுக்கும்போது எனக்கு அளவில்லா பெருமை உணர்ச்சி வருகிறது. நான் கற்ற அறிவை மற்ற மாணவர்களுடன் பகிர்வது என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் கல்வி எனக்கு ஒரு வேலை வாய்ப்பை மட்டும் தரவில்லை; அது எனக்கு தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தது. இன்று நான் என் சொந்த காலில் நின்று என் வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்னேற்றிக் கொண்டு இருக்கிறேன். என் எதிர்காலம் குறித்து பெரிய கனவுகள் உள்ளன. இன்னும் பலருக்கு உதவி செய்ய வேண்டும், என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் வாழ்க்கையை மாற்றிய இந்த வெற்றி நிச்சயம் திட்டத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/

“என் வாழ்வின் திருப்புமுனை...” - புவனேஸ்வரி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்
“தவறி வந்த ஒரு வார்த்தை” - த்ரிஷா குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in