முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி
Updated on
1 min read

சென்னை: ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக, அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் என்ற அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேலான ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்ளனர்.

இவர்களுடைய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை இந்த அமைப்பு செயல்படுத்துகிறது.

இதன் மூலம், பல்வேறு இளங்கலை பட்டம் பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ் ஸ்டடிஸ் மற்றும் எம்ஜிஆர் எஜுகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் 20 முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்படும். இதற்கு ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை https://abpssptn.blogspot.com/ இணையதளத்தில் அறியலாம் என அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் (ஓய்வு) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in