ஆல்ஃபா பொறியியல் கல்லூரி 2023-க்கான ஆண்டறிக்கை வாசிப்பு

ஆல்ஃபா பொறியியல் கல்லூரி 2023-க்கான ஆண்டறிக்கை வாசிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை திருமழிசையில் உள்ள ஆல்ஃபா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.

ஆல்ஃபா பொறியியல் கல்லூரியில் 2023 -ம் ஆண்டுக்கான கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக தலைவர் ஆர்.பிரீத்தி மற்றும் நடிகரும் கலக்கப்போவது யாரு சாம்பியனுமான அசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி முதல்வர் பி.சவுமியா நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் கல்லூரியின் ஆண்டு நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஆண்டறிக்கையை சமர்பித்தார். கல்லூரித் தலைவர் கிரேஸ் ஜார்ஜ் தலைமை உரையாற்றினார். துணைத்தலைவர் சுஜா ஜார்ஜ் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களின் உரையை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து துறைகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in