பொறியியல் மாணவர் சேர்க்கை: 1.29 லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் மாணவர் சேர்க்கை: 1.29 லட்சம் பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த 12 நாளில் ஒருலட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர்.

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். 12-வது நாளான நேற்று மாலை6 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 192 பேர்விண்ணப்பத்தை பதிவுசெய்துள் ளனர்.

அவர்களில் 79,890 பேர் பதிவு கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 41,552 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in