

சென்னை: சிறைவாசிகளில் 58 பேர் முதுகலை, 96 பேர் இளங்கலை படிப்புகளைப் படித்து வருவதாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதன்பின், துறையின் அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டம் மற்றும் நீதி நிர்வாகத் துறையின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் கொள்கை விளக்கக் குறிப்பில் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 9,844 சிறைவாசிகள், பல்வேறு பாடப் பிரிவுகளைத் தொடர்ந்து பயின்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் விவரம்: