போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: சென்னையில் 19-ம் தேதி நடக்கிறது

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: சென்னையில் 19-ம் தேதி நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (எஸ்எஸ்சி) போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்புக்கு சேர, தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க உள்ளவர்கள், தங்களது ஆதார் அட்டை நகல், விண்ணப்பப்படிவ நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன், கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொள்ளலாம். கூடுதல் 9499966026, 9499966023, 8870976654, 044-22500835 எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in