காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ் அகாடமி சாதனை

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ் அகாடமி சாதனை
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் 444 இடங்களில் சென்னை ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 45 பேர் தேர்ச்சி பெற்று (10% வெற்றி) மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ்அகாடமி சென்னை அண்ணாநகரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 17 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எளியமுறை புத்தக கையேடுகள் உதவியுடன், தரமான ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் குழுவாகக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பொது அறிவுத் தேர்வு நடப்பு நிகழ்வுக்கான தினசரி சிறப்பு வகுப்புகள், வாரம் ஒருமுறை பாடவாரியான மாதிரி தேர்வுகள், முழு பாடத் தேர்வுகள் என பல்வேறு கட்டங்களாக மாணவர்களை தயார்படுத்தி வருகிறது.

நடந்து முடிந்த காவல் துறை உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வில் 45 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வரும் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளன. ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், விதவை மற்றும் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவசம்.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ் அகாடமியில் 75 நாட்கள் உணவு மற்றும் விடுதி வசதியுடன் தங்கி பயிற்சி பெற விரும்புவோர் 9894996777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஸ்ரீ ராஜீவ்காந்தி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் வி.வி.மூர்த்தி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in