

சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்த ஜேஇஇ மெயின்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஃபிட்ஜி மாணவர்கள் வெற்றி பெறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது இதன் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது.
வரும் ஆக. 28-ல் நடைபெறவுள்ள ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு சென்னை ஃபிட்ஜி மாணவர்கள் 770 பேர் தேர்வாகியுள்ளனர். ஃபிட்ஜி மாணவியான தீக்ஷா திவாகர் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
தேசிய அளவில் 10 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் இவர் 53-ம் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய அளவில் முதல் 1,000 ரேங்க்களில் தமிழ்நாடு ஃபிட்ஜி மாணவர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.
முதல் 10 ரேங்க்களில் முதல் மற்றும் 3-ம் ரேங்க்களை ஃபிட்ஜி மாணவர்கள் பெற்றுள்ளனர். 100 ரேங்க்களுக்குள் 21 மாணவர்கள் வந்துள்ளனர். தேசிய அளவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபிட்ஜி மாணவர்கள் ஜேஇஇஅட்வான்ஸுக்கு தேர்வாகியுள்ளனர்.
இது ஃபிட்ஜியின் முறையான கற்பித்தலையும் மாணவர்களின் தளர்வடையாத திறனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஃபிட்ஜி மாணவர்கள் கடின உழைப்பையும், திறனையும் கொடுத்துஇந்த வெற்றியை ஈட்டியுள்ளனர்.
இவ்வாறுஃ பிட்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.