

இன்றைய மாணவர்கள் பலருக்கும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் எளிதாகக் கிடைத்துவிட்டதால், தாங்களே ஒரு ஊடகமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும், தெரிந்தோ தெரியாமலோ, ஒரு ஊடகமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒரு படி மேலே செல்பவர்கள்தான் தனியாக யூடியூப் போன்ற சேனல்களை உருவாக்கிச் செயல்படுகின்றனர். இப்படியான மாணவர்களுக்கு சரியான பயிற்சியை வழங்கும்போது, அவர்கள் மிக எளிதாக அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடிகிறது.
பாடத்திட்டத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்: ஊடகம் தொடர்பாக எந்த படிப்பில் சேர விரும்பினாலும், முதலில் அந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அந்த படிப்பு தொடர்பான முழு விபரங்களையும் அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அவர்கள் வழங்கும் பாடத்திட்டத்தை பருவம் வாரியாக விரிவாகப் பதிவேற்றியுள்ளனர்.
இதன் துணை கொண்டு, நீங்கள் படிக்க விரும்பும் பாடங்கள் அதில் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் இதழியல் மற்றும் தொடர்பியல் படிப்பிற்கான பாடத்திட்டத்தினை https://tinyurl.com/tzfek5me எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
நம்ப முடியாத மாற்றம்!
இன்று நாம் நினைத்தவுடன் ஒரு நேரலையைச் செய்துவிட முடிகிறது. ஒரு நிகழ்வை வீடியோ எடுத்து, அதனை எடிட் செய்து, நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே பதிவேற்றம் செய்துவிடவும் முடிகிறது.
இவையெல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்று. வெளிநாட்டு ஊடகங்களை வான் அஞ்சல் கடிதம் வழியாக மட்டுமே தொடர்புகொள்ள முடியும். ஒரு சில நாடுகளின் ஊடகங்களை, இந்தியாவில் உள்ள தூதரகங்களின் துணை கொண்டு மட்டுமே நாடமுடியும் என்ற சூழல் இருந்தது.
இன்று அது அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை ஒரே ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக்கான ஊடகங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகளாக அனுப்பிவிட முடிகிறது. காலமும் செலவுமும் எவ்வளவு மிச்சமாகிவிட்டது! இதேதான் ஊடகத்திலும் நிகழ்ந்துள்ளது.
அதனை மனதில் கொண்டே, இதழியல் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்களைப் படிப்பதன் ஊடாக மாணவர்கள், தாம் எந்த கட்டத்திலிருந்து, எந்த இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
> இது, உதவி பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்