

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் கோவை உட்பட 6 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பு:
திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அதிகாரி பெ.அய்யண்ணன் ஈரோடு மாவட்டத்துக்கும், கடலூர் முதன்மைக்கல்வி அதிகாரி ஆர்.பூபதி கோயம்புத்தூருக்கும், கரூர் முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.மதன்குமார் திருப்பத்தூருக்கும், ஈரோடு முதன்மைக்கல்வி அதிகாரி எம்.ராமகிருஷ்ணன் கடலூருக்கும், கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.கீதா கரூர் மாவட்டத்துக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாக அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.