ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்: ஆலன் மாணவர்கள் சாதனை
ஜேஇஇ மெயின் தேர்வில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மீண்டும் சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து ஆலன் இயக்குநர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியதாவது: ஜேஇஇமெயின் தேர்வு கடந்த ஜூன்மாதம் நடைபெற்றது நாடு முழுவதும் மொத்தம் 407நகரங்களில் 588 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற ஸ்நேகா, நவ்யா, குஷக்ரா வஸ்தவா ஆகியோர் ஜேஇஇ மெயின் தேர்வில் 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்றுமுறையே அசாம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களில் முதல் மாணவர்களாக தேர்வாகியுள்ளனர்.
அதேபோல 11 மாநிலங்களில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் ஆலனில் பயின்றவர்கள். அதாவது ராஜஸ்தானில் நவ்யா, ஒடிஷாவில் திவ்யான்ஷு மாலு, மத்திய பிரதேசத்தில் சம்யாக்ஜெயின், மகாராஷ்டிராவில் அத்வை கிருஷ்ணா, ஜார்க்கண்ட் குஷக்ரா வஸ்தவா, குஜராத் மஹித் காந்திவாலா, சத்தீஸ்கர் அபினவ் ராஜேஷ் ஸ்ரீபத், சண்டீகர் சரத் சிங்லா,பிஹார் ஆதித்ய அஜய், புதுச்சேரி சித்தார்த், அசாம் ஸ்நேகா பரீக் ஆகிய ஆலன்மாணவ, மாணவிகள் மாநிலஅளவில் முதலிடம் பெற்றுள்ளனர் என்றார்.
