

அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளையின் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர் கல்வி செல்லும் வாய்ப்பு வழங்க அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை http://uhetrustindia.org/ என்ற இணையதளத்தில் இருந்து இன்று (13-7-2022) முதல் வரும் 22-ம் தேதி வரை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்ப படிவத்தில் மாணவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் சான்றொப்பம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கல்லூரியில் சேர்ந்த ஒரு வார காலத்துக்குள் ‘திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டர் எம்.ஜி.ஆர் ப்ளாக், விஐடி வளாகம், வேலூர்-14’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
உயர் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். மேலும், அவர்களின் வீட்டுக்குச் சென்று குடும்ப பொருளாதார நிலையை அறிந்த பின்னரே உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’’என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.