யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணிகள் அடங்கிய 1,011 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த பிப்.2-ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 5-ம் தேதி நடந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.upsc.gov.in, www.upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியானது.

இத்தேர்வில் நாடு முழுவதும் 13,090 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு செப்.16-ம் தேதி தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in