நீட் & ஜேஇஇ தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக லீப் அகாடமியில் பயிற்சி பெற மாணவர்கள் தேர்வு

நீட் & ஜேஇஇ தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக லீப் அகாடமியில் பயிற்சி பெற மாணவர்கள் தேர்வு
Updated on
1 min read

சென்னை: லீப் அகாடமி (Leap Academy) சார்பில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி பெறுவதற்காக விநாடி-வினா போட்டி மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கல்விப்புலன் இருந்தும் பண வசதி இல்லாத குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் லீப் அகாடமி (Leap Academy) சார்பில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி பெற 467 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 167 விண்ணப்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு கடந்த மே 29-ம்தேதி விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக மகாத்மா மான்டிசோரி பள்ளியை சேர்ந்த முகமதுரிவினுக்கு சாம்சங் டேப் A7 (Tab A7), 2-ம் பரிசாக தெஜா வித்யாலயா பள்ளியை சேர்ந்த செபுரி வேணுகோபாலுக்கு Kindle, 3-ம் பரிசாக PSSB பள்ளியை சேர்ந்த ஹர்ஷவர்தனுக்கு ஜீப்ரானிக்ஸ் புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் புளூடூத் இயர்பீஸ் ஆகியவற்றை சவுஜன்யா கிருஷ்ணா வழங்கினார்.

விநாடி-வினா போட்டியில் அன்ஷல் டாக் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்த போட்டியை அரவிந்த் ஒருங்கிணைத்து நடத்தினார். இப்போட்டிக்கு ‘இந்து தமிழ் திசை’ மற்றும் Quiz IT ஆகியவை ஆதரவு அளித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in