

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மையத்தின் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மையம் சார்பில் ஆராய்ச்சி நிதியுதவி திட்டத்தின்கீழ் புராஜெக்ட் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
பொறியியல் 3-ம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். திட்ட கருத்துருக்களை ஆன்லைனில் செப்.15-க்குள்சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை http://ctdt.annauniv.edu/sip என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.