முதுநிலை நீட் தேர்வில் 2.66 லட்சம் பேர் பங்கேற்பு: செப்.30-ம் தேதி முடிவுகளை வெளியிட திட்டம்

நாடு முழுவதும் 1,111 மையங்களில் நடைபெற்றது
முதுநிலை நீட் தேர்வில் 2.66 லட்சம் பேர் பங்கேற்பு: செப்.30-ம் தேதி முடிவுகளை வெளியிட திட்டம்
Updated on
1 min read

சென்னை: ​முது​நிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் 1,111 மையங்​களில் நடை​பெற்​றது. எம்​பிபிஎஸ் முடித்த 2.66 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தேர்வு முடிவு​கள் செப்​.30-ம் தேதி வெளி​யாகின்​றன.

நாடு முழு​வதும் உள்ள அரசு, தனி​யார் மருத்​து​வக் கல்​லூரிகள், நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​கள், மத்​திய அரசின் கல்வி நிறு​வனங்​களில் மருத்​து​வப்பட்ட மேற்​படிப்​பு​களான எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளமோ படிப்​பு​களுக்​கான இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறுப​வர்களைக் கொண்டு நிரப்​பப்​படு​கிறது. இந்த நீட் தேர்வை ஆண்​டு​தோறும் தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் (என்​பிஇஎம்​எஸ்) நடத்​துகிறது.

அதன்​படி, எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளமோ படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான நீட் தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழு​வதும் இருந்து எம்​பிபிஎஸ் முடித்த மருத்​து​வர்​கள் 2.73 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், திருச்​சி, மதுரை, கோவை என 24 இடங்​கள் உள்பட நாடு முழு​வதும் 339 நகரங்​களில் உள்ள 1,111 தேர்வு மையங்​களில் முது​நிலை நீட் தேர்வு ஞாயிறு காலை 9 மணி முதல் மதி​யம் 12.30 மணி வரை நடை​பெற்​றது. முறை​கேடு​களைத் தடுக்க தீவிர கண்​காணிப்​பு, பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. தேர்​வில் 2,65,980 பேர் பங்​கேற்​றனர்.

நீட் மறு​தேர்வு: ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் 2 தேர்வு மையங்​களில் மின் விநி​யோகத் தடை காரண​மாக, 2,445 பேர் தேர்வு எழுது​வ​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. அதனால், மறு​தேர்வு நடத்த வேண்​டும் என தேர்​வர்​கள் கோரிக்கை வைத்​தனர். இதையடுத்​து, அந்த 2 மையங்​களைச் சேர்ந்த தேர்​வர்​கள் 2,445 பேருக்கு செப்​.5-ம் தேதி பிற்​பகல் 3 மணிக்கு மறு​தேர்வு நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்வு முடிவு​களை செப்​.30-ம் தேதி வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

50 சதவீத இடங்​கள் ஒதுக்​கீடு: நாடு முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களின் மொத்த இடங்​களில் 50 சதவீத இடங்​கள் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கின்​றன. இந்த இடங்​கள், நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​களின் இடங்​கள், மத்​திய அரசுக் கல்வி நிறு​வனங்​களின் இடங்​களுக்கு மத்​திய அரசின் சுகா​தார சேவை​களுக்​கான தலைமை இயக்​குநரகத்​தின் (டிஜிஎச்​எஸ்) மருத்​து​வக் கலந்​தாய்​வுக் குழு (எம்​சிசி) ஆன்​லைனில் கலந்​தாய்வை நடத்​துகிறது.

தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் மீத​முள்ள 50 சதவீத இடங்​கள், தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் மாநில அரசுக்​கான இடங்​கள் மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான கலந்​தாய்வை தமிழ்​நாடு மருத்​து​வக் கல்​வி, ஆராய்ச்சி இயக்​ககம்​ (டிஎம்​இ) நடத்​து​வது குறிப்​பிடத்​தக்​கது.

முதுநிலை நீட் தேர்வில் 2.66 லட்சம் பேர் பங்கேற்பு: செப்.30-ம் தேதி முடிவுகளை வெளியிட திட்டம்
“தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது” - எடப்பாடி பழனிசாமி ஆரூடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in