ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

‘டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யாகிறது.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர்​கள், தையல், ஓவி​யம், உடற்​கல்விஉள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர்​கள், பட்​ட​தா​ரி, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் டிஆர்பி எனப்​படும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக நியமிக்​கப்​படு​கிறார்​கள். அது​மட்​டுமின்றி வட்​டார கல்வி அலு​வலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை​யாளர், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்​னிக் விரிவுரை​யாளர் பணி​யிடங்​களும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாகவே நிரப்​பப்​படு​கி்ன்​றன.

தற்​போது அரசு பள்​ளி​களில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. எனினும் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படக்​கூ​டாது என்​ப​தற்​காக அந்த பணி​யிடங்​களில் தொகுப்​பூ​தி​யத்​தில் தற்​காலிக ஆசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு கற்​பித்​தல் பணி​கள் தொய்​வின்றிநடந்து வரு​கின்​றன. அரசு பள்​ளி​களில் நிரந்தர ஆசிரியர்​களை நியமிக்க வேண்​டும் என்று கோரிக்கை அரசி​யல் கட்சி தலை​வர்​களால் தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், அரசு பள்​ளி​களில் டிஆர்பி மூலம் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை விரை​வில் நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதற்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மா்தம் வெளி​யாகிறது. பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆகஸ்ட் மத்​தி​யில் வெளி​யிட்டு போட்​டித்​தேர்​வினை நவம்​பர் மாதம் நடத்த டிஆர்பி திட்​ட​மிட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை டெட் தாள்​-2-ல் தேர்​வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்​கள் எழுதலாம்.

பட்​ட​தாரி ஆசிரியர் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர் தேர்வை பொருத்​தவரை​யில் சம்​பந்​தப்​பட்ட பாடப்​பிரி​வில் 150 கேள்வி​களுக்​கும் கட்​டாய தமிழ் மொழி தகு​தித்​தேர்​வில் 30 கேள்வி​களுக்​கு்ம் விடையளிக்க வேண்​டும். தமிழ் தாள் தேர்​வில் குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் எடுக்க வேண்​டும்.

தமிழ் தேர்வு மதிப்​பெண் மெரிட் பட்​டியலுக்கு எடுத்​துக்​கொள்​ளப்​ப​டாது என்​றாலும் இதில் தேர்ச்சி பெற்​றால் மட்​டுமே விண்​ணப்​ப​தா​ரரின் பாடத்​தேர்வு விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடைசி​யாக பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வானது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு நடத்​தப்​பட்டு அதன்​மூலம் 2,582 ஆசிரியர்​கள் தேர்​வு செய்​யப்​பட்​டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் ஒரு வாரத்தில் முக்கிய முடிவு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in