500-க்கு 499 மதிப்பெண் பெற்று அரசு பேருந்து நடத்துநரின் மகள் சிறப்பிடம்!

500-க்கு 499 மதிப்பெண் பெற்று அரசு பேருந்து நடத்துநரின் மகள் சிறப்பிடம்!
Updated on
1 min read

கும்பகோணம்: 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகளுக்கு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் கும்பகோணம்-2 கிளையில் நடத்துநராக பணியாற்றுபவர் வெங்கடேசன். இவரது மகள் சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இதையடுத்து, நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வழிக்காட்டுதலின்படி பொது மேலாளர் என்.முத்துக்குமாரசாமி, மாணவி சோபியாவை, கும்பகோணம் கோட்ட தலைமை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வரவழைத்து, இனிப்பு, பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இதில், துணை மேலாளர்கள் தங்கபாண்டியன், கார்த்திகேயன், உதவி மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், குமார், உதவி பொறியாளர்கள் ராஜ்மோகன், மேரி மற்றும் ஓட்டுநர், நடத்துநர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in