அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர் குறைதீர் குழுக்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர் குறைதீர் குழுக்கள்: யுஜிசி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் குறைதீர் குழுக்களை அமைக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனம் தொடர்பாக குறைகள், புகார்கள் ஆகியவற்றை தெரிவிப்பதற்கு ஏதுவாக மாணவர் குறைதீர் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மாதம் தெரியப்படுத்தப்பட்டது.

எனவே, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த குழுக்களை முறையாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் குழுக்களின் விவரங்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களும் அந்த விவரங்களை ஒருங்கிணைத்து யுஜிசிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in