ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.

இதில் முதன்மைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டு, முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்.4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 10.67 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இருகட்ட முதன்மைத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் என்.முகுந்த் பிரதீஷ், என்.ராம் உட்பட 56 பேர் வரை முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர இரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain @nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in