கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’

கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’
Updated on
1 min read

சென்னை: கேட் நுழைவுத் தேர்​வில் 12 பேர் நூற்​றுக்கு நூறு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். ஐஐஎம் போன்ற தேசிய அளவி​லான முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்​களில் முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர, கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த ஆண்​டுக்​கான கேட் தேர்வு நாடு முழு​வதும் 170 மையங்​களில் கடந்த நவம்​பர் 30-ம் தேதி நடை​பெற்​றது. 2.58 லட்​சம் மாணவர்​கள் பங்​கேற்​றனர். இத்​தேர்வு முடிவு​களை கோழிக்​கோடு ஐஐஎம் நேற்று முன்​தினம் வெளி​யிட்​டது.

அதில், 12 பேர் நூற்​றுக்கு நூறு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். 26 பேர் 99.99 மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். இந்த ஆண்​டும் தேர்ச்​சி​யில் மாணவர்​கள் ஆதிக்​கம் செலுத்​தி​யுள்​ளனர்.

கேட் தேர்வு முடிவு​களை iimcat.ac.in என்ற இணை​யதளத்​தில் தெரிந்து கொள்​ளலாம். கட்​ஆஃப் மதிப்​பெண் 90-க்கு மேல் நிர்​ண​யிக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது. கேட் மதிப்​பெண் மூலம், ஐஐஎம் மட்​டுமின்​றி, 93 இதர உயர்​கல்வி நிறு​வனங்​களி​லும் மேலாண்மை படிப்​பு​களில் சேர​முடி​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’
ஐஐடி ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விழா: ஜன.2-ம் தேதி தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in