Published : 11 Jun 2023 04:15 AM
Last Updated : 11 Jun 2023 04:15 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி

சென்னை: கையெழுத்து அழகாக இருக்கவேண்டுமென்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. முறையான முயற்சியோடு பயிற்சியையும் மேற்கொள்வோருக்கு கையெழுத்து அழகாக அமைந்துவிடும்.

அத்தகைய விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23 வரை தொடர்ந்து 5 நாட்களும் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.

இந்தக் கையெழுத்துப் பயிற்சியை மாணவர்களின் வரைதல், சதுரங்கம், நடனம் மற்றும் சிறப்புத் திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான பல பயிற்சிகளைப் பல்லாண்டுகளாக வழங்கிவரும் பெருந்துறையிலுள்ள கிட்ஸ் அகாடமி மற்றும் டாப்பர்ஸ் கிளாஸின் நிறுவனரும் புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான என்.சிந்துஜா புவனேஷ் வழங்க உள்ளார். இவர் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கையெழுத்து திறனை மேம்படுத்தி, அவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற பயிற்சியளித்துள்ளார்.

இந்தப் பயிற்சியில் எழுதும்போது உட்கார்ந்திருக்கும் தோரணை, எழுதப் பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்றவற்றை வைத்திருக்கும் முறை, சிறிய எழுத்துகள், பெரிய எழுத்துகள், எண்கள், சொற்கள், வாக்கியம், பத்தி ஆகியவற்றை எழுதும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/handwritingprogram என்ற லிங்கில், ரூ.599/- மட்டும் (வரிகள் உட்பட) கட்டணமாக செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடு மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 7418036466 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x